ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ்… – வைரலாகும் போட்டோ

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தமிழக முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம். அதே நேரத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக பதவியேற்றார் சசிகலா.

பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்ற பின்னர் கடந்த ஒரு வாரகாலமாக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சசிகலா உடன் இணைந்து நிர்வாகிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இதில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஒரு ஓரத்தில் கடைசியாக நின்றிருந்தார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஓ. பன்னீர் செல்வம் இப்போதே ஓரங்கட்டப்பட்டு விட்டார். ஒருவேளை சசிகலா முதல்வரானால் அமைச்சரவையிலாவது இருப்பாரா ஓபிஎஸ் என்று கேட்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். தமிழக முதல்வருக்கே இந்த நிலையா? ஆனாலும் அவர் கவலைப்படமாட்டார் என்றும் அவரது ஆதரவாளர்கள் பேசிக்கொள்கின்றனர்.

Posted in: செய்திகள்