ஜல்லிக்கட்டு விவகாரம்: கொந்தளிக்கும் நடிகர் விஜய் சேதுபதி

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான இளைஞர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு போராட்டம் நடத்தினார்.

இதற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி இது குறித்து கூறுகையில், மாடுகள் வதைக்கப்படுவதாக சிலர் கூறுகின்றனர். அதிலும் ஒரு சிலர் நம் இனங்களை பாதுக்காக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

இதில் தான் பார்த்தவரைக்கும் மாடுகள் எங்கு வதைக்கப்படுகிறது என்று தெரியவில்லை, நம் இனங்கள் அழிக்கப்பட்டுவிடும் என்ற பயம் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதே போன்று தான் நாட்டுக் கோழியில் ஒன்றும் இல்லை எனக் கூறி கறிக்கோழி கொண்டு வந்தனர்.

தற்போது அதை சாப்பிட்டால் ஏராளமான நோய்கள் வருகிறது என்று கூறுகின்றனர். முன்பு தாம் கரியில் பல் தேய்த்துக் கொண்டிருந்தோம், அப்போது கிண்டல் செய்யும் விதாமாக இன்னும் நீங்கள் கரியில் தான் பல் தேய்க்கிறீர்களா என்று கூறப்பட்டது. தற்போது அதையே நிங்கள் உபயோகிக்கும் பல் பொடியில் கரி இருக்கிறதா என்று கேட்கிறார்கள்.

இது தமக்கு புரியவில்லை என்றும் நாம் வாழ்வதற்கு எப்படி உரிமை இருக்கிறதோ அதே போன்று இந்த பூமியில் வாழும் கால்நடைகளுக்கு உரிமை இருக்கிறது என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

பிரபல திரைப்படமான பூலோகம் படத்தில் வசனம் ஒன்று வரும் எனவும் அதில் உலகத்தில் எந்த மூலையில் எந்த பிரச்சனை கிளம்பினாலும் அதற்கு பின்னாடி ஒரு வியாபாரம், வியாபாரி இருப்பாங்க என்று வரும் அதே போன்று தான் இந்த பிரச்சனையை தான் பார்கிறேன்.

என்ன நடந்தாலும் சரி இங்கே உள்ள கால்நடைகளும் ஜீவராசிகளும் இங்க தான் இருக்கனும். அதை விட்டு விட்டு வேற இனத்து மாடுகளை இங்கு கொண்டு வருவதன் மூலம் ஒன்று நடக்கிறது என்பதை தன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது, அது கண்டிப்பாக நடக்கவும் கூடாது என கூறியுள்ளார்.

தற்போது உள்ளவர்கள் இதை எல்லாம் பேசி நம்மகிட்ட இருந்து இதை எல்லாம் அழித்துவிடுவார்களோ என்ற பயம் இருக்கு என்றும் அந்த இனம் அழிக்கப்பட்டு விடக் கூடாது பாதுகாக்கப்படனும், ஜல்லிக்கட்டுக்கு தன்னுடைய ஆதரவு என்றும் உண்டு எனவும் கூறியுள்ளார்.

Posted in: செய்திகள்