பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் எது தெரியுமா?

இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் பலாத்காரம், பலாத்கார முயற்சி, வரதட்சணைக் கொடுமை, பாலியல் தொல்லை, பாலியல் துன்புறுத்தல், கணவர் கொடுமை, கணவரின் உறவினர்களால் கொடுமை போன்ற 7 குற்றச் செயல்களை மையமாக வைத்து 53 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக கோயம்புத்தூர் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 53 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக இந்தியாவில் ஜோத்பூர் இருக்கிறது.

கோயம்புத்தூரில் 0.01 குற்றச் செயல் என்றால் ஜோத்பூரில் 0.54 என பெண்களுக்கு எதிரான குற்றச் செயல் நிகழ்கிறது.
கோயம்புத்தூரில் முதலிடம் பிடிக்க பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

வீடுகளில் பெண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, நன்றாக படிக்க வைப்பது, பொதுவாகவே பெண்களை மரியாதையாக பார்க்கும் கண்ணோட்டம் கோயம்புத்தூரில் இருக்கிறதாம்.

பெண்களை மரியாதையாக நடத்துவதிலும் கோயம்புத்தூர் முதலிடம் பிடிக்கிறது.

பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை தலைநகர் சென்னை பிடித்திருக்கிறது. ஐந்தாவது இடத்தை திருச்சி 0.03 புள்ளிகளுடன் பெற்றுள்ளது.

இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முதல் 10 நகரங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று நகரங்கள் பெற்றுள்ளன.

கோவை 0.01, சென்னை 0.01, சூரத் 0.3, கண்ணூர் 0.03, திருச்சி 0.03, அகமதாபாத் 0.04, மலப்புரம் 0.05, வதோரா 0.06, ராஜ்கோட் 0.06, கொல்கத்தா 0.07. சென்னை, கொல்கத்தா ஆகிய இரண்டு மெட்ரோ நகரங்கள் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரங்கள் பட்டியலில் ராஜஸ்தானின் ஜோத்பூர் 0.54 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தலைநகர் டெல்லி 47 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது.

பாட்னா, கேட்டா, குவாலியர், அசன்சால், விஜயவாடா, பரீதாபாத், மீரட், ஜெய்ப்பூர் நகரங்கள் முதல் பத்து இடங்களில் உள்ளது.

Posted in: செய்திகள்