அதிமுக நிர்வாகி வெடிகுண்டு வீசி படுகொலை: வாட்ஸ் அப்பில் பரவும் பரபரப்பு வீடியோ

புதுச்சேரி அதிமுக நிர்வாகியும், திமுக முன்னாள் அமைச்சருமான விஎம்சி சிவகுமாரை படுகொலை செய்த மர்ம நபர்கள் குறித்த பரபரப்பு வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் விஎம்சி சிவக்குமார், கடந்த 3ம் திகதி மர்ம நபர்களால் வெடிகுண்டு வீசியும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விஎம்சி சிவக்குமாரை கொலை செய்து தப்பிய கும்பல் காரைக்காலில் உள்ள அவரது மதுபான கடை மீதும் வெடிகுண்டு வீசும் காட்சி ஒன்று வாட்ஸ் அப்பில் வெளியாகியுள்ளது.

குறித்த வீடியோவில், இருசக்கர வாகனத்தில் வரும் 2 பேர் கண்யிமைக்கும் நேரத்தில் மதுபான கடை மீது வெடிகுண்டு வீசி விட்டு செல்கின்றனர். குண்டு வெடித்தவுடன் அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளிக்க அங்கிருந்தவர்கள் நாளாபுறமும் சிதறி ஓடுகிறார்கள்.

இந்த சம்பவத்தின் போது ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். விஎம்சி சிவகுமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என கருதப்படும் எழிலரசி உள்ளிட்டவர்களை புதுச்சேரி தனிப்படை பொலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Posted in: செய்திகள்