சசிகலா எதற்கும் தகுதியில்லாதவர்! தைரியமாக கர்ஜித்த ஆடிட்டர் குருமூர்த்தி

அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா எதற்கும் தகுதியில்லாதவர் என பிரபல வார இதழான துக்ளக்கின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டுக்கு பெரும்பாலும் தவறான அமைச்சர்கள், தவறான முதலமைச்சர்கள் தான் வாய்க்கிறார்கள் என ஓ.பி.எஸ்சை சீண்டினார்.

பின்னர், அந்த வரிசையில் தற்போது தவறான பொது செயலாளரும் தமிழ்நாட்டின் ஒரு கட்சிக்கு வாய்த்திருக்கிறார் என சசிகலாவின் பெயரை சொல்லாமல் குருமூர்த்தி பேசினார்.

அவர் இதை சொல்லி முடித்ததும் அரங்கிலிருந்தவர்கள் பலமாக கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in: செய்திகள்