அம்மாவிற்கு, கணவரை தேர்ந்தெடுத்த பிரபல நடிகையின் மகள்!!

1980-களில் தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற அவர், பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து தற்போது, மும்பையில் வசித்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துவிட்ட ஸ்ரீதேவி, கடந்த 2012-ல் வெளியாகி வரவேற்பை பெற்ற `இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தின் மூலம் ரிஎன்ட்ரி ஆனார். அதைத் தொடர்ந்து அவ்வப்போது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்தவகையில் ஸ்ரீதேவி தற்போது நடித்து வரும் படம் `மாம்’. இந்தியில் எடுக்கப்பட்டு வரும் இப்படம், தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது.

அ மேட் பிலிம்ஸ் & தர்ட் ஐ புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து வழங்கும் `மாம்’ படம் ரிலீசாவதற்கு முன்பே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரவி உத்யவார் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

அக்‌ஷய் கண்ணா, நவாசுதின் சித்திக்கி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

மேலும் `எ மைடி ஹார்ட்’ என்ற ஹாலிவுட் படத்தில், ஏஞ்சலினா ஜோலியுடன் நடித்த அத்னன் சித்திகி இப்படத்தில் ஸ்ரீதேவியின் கணவராக நடித்துள்ளார். இதில் அத்னனின் தேர்வுக்கு ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தான் முக்கியக் காரணம் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து படக்குழு கூறுகையில், “ஜான்விக்கு அத்னனின் நடிப்பு மிகவும் பிடிக்கும். அதற்கு அவர் நடித்த `மைட்டி ஹார்ட்’ படம் ஒரு காரணம். அத்னன் சித்திகியை இந்தப் படத்தின் தேர்வுக்கு வர சம்மதிக்க வைத்தனர். பிறகு போனிகபூர் உடனடியாக அத்னனின் குழுவிடம் பேசி அவரைப் படத்துக்காக ஒப்பந்தம் செய்துவிட்டார்” என்றனர்.

Posted in: செய்திகள்