உலகின் அழகான பெண்கள் இவர்கள் தானாம்…

உலகின் அழகான பெண்மணிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா.

இவர் விஜய்யுடன் ’தமிழன்’ என்ற படத்தில்தான் ஹீரோயினாக அறிமுகமானவர்.

இந்தி நடிகைகள் பிரியங்கா சோப்ராவுக்கும் தீபிகா படுகோனுக்கும் யார் முதலிடம் என்பதில் எப்போதுமே போட்டி. பிரியங்கா ஹாலிவுட்டுக்குப் போனதால் தீபிகாவும் போனார் ஹாலிவுட்டு.

இந்த ஆரோக்கிய போட்டி, அம்சமாகச் சென்றுகொண்டிருக்கிறது பாலிவுட்டில். அவர்களுக்குள் நிஜமாகவே போட்டியிருக்கிறதோ இல்லையோ, ரசிகர்கள் அதை தம் கட்டிக்கொண்டு ஒப்பிட்டு பார்க்கிறார்கள் சீரியசாக.இந்நிலையில் உலகின் அழகானப் பெண்கள் பட்டியலில் தீபிகாவை பின்னுக்குத் தள்ளியிருக்கிறார் பிரியங்கா.

யார் அழகான பெண்மணி என்ற கருத்துக் கணிப்பை, சமூக வலைத்தளம் ஒன்று சமீபத்தில் நடத்தியது. இதில் முதலிடத்தில் இருக்கிறார் பாப் ஐகான், பியான்ஸ். இவருக்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் முதலிடத்தில் இருப்பதில் ஆச்சரியமில்லை.

இரண்டாவது இடத்தில் பிரியங்கா சோப்ரா வந்ததுதான் பலரது புருவங்களை உயர வைத்திருக்கிறது. பிறகு, ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, எம்மா வாட்சன், நம்மூர் தீபிகா உட்பட பலரை பின்னுத்தள்ளியிருக்கிறாரே பிரியங்கா! இதையடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் பிரியமான பிரியங்கா.

Posted in: செய்திகள்