சந்தனத்தைப் பயன்படுத்தி சாந்தமான வாழ்வு வாழ, இதோ சில வழிகள்.

சந்தனத்துண்டுளை நீரில் ஊற வைத்து மையாய் அரைத்து சுண்டைக்காயளவு பாலில் கலந்து இரவு மட்டும் 20 நாள் உட்கொள்ள பால் வினை நோய், தந்திபேகம், பிரமேகம், கனோரியா, பெண் நோய் என்று பல பெயர் பெறும் இவை யாவும் குணமாகி உடல் தேறி, நோய்களும் தீர்ந்துவிடும்.

நெல்லிக்காய்ச்சாறு 15 மில்லியில் சுண்டைக்காய் அளவு சந்தன விழுதைக் கலந்து 40 நாள் குடித்து வர மதுமோகம் தீரும். அதுமட்டுமல்லாது, சந்தனத்தின் நறுமணம் மனத்திற்கு அமைதியைக் கொடுக்கும். தீக் காயங்களை ஆற்றும்.தலை குளிர்ச்சிக்கும், சிறு வெட்டுப்புண்களை ஆற்றும் திறனுக்கும் சந்தனப்பூச்சு அவசியம். சந்தன எண்ணெய் ஒரு கிருமி நாசினியும் கூட.

குழந்தைகளின் சருமத்தை மிருதுவாக வைத்திருக்கவும், அரிப்பு வியர்குரு போன்றவை வராமல் தடுக்கவும்,உடலுக்கு மட்டும் இன்றி, மனதையும் மகிழ வைக்கும் அரோமா (வாசனை) வைத்தியத்திற்கும் சந்தனம் பயன்படுத்தப்படுகின்றது.

அரைத்த சந்தன தண்ணீருடன் சேர்த்த கஷாயம் உடல், வாய் துர்நாற்றங்களை போக்கும். சந்தனம் சிறு நீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயற்படும். வியர்வையை மிகுவிக்கும், வெண்குஷ்ட்டம், மேக நீர், சொறி, சிரங்கைக் குணப்படுத்தும். சிறுநீர் தாரை எரிச்சல் சூட்டைத் தணிக்கும், விந்து நீர்த்துப் போதலைக் கெட்டிப் படுத்தும். குளிர்ச்சி தரும் உடற் சூட்டைத் தணிக்கும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைப் போக்கவும், உடல் சூட்டைத் தணிக்கவும், சந்தனத்தூள் உபயோகப்படுகிறது. அத்துடன் சந்தனத்தூளை இளநீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் வடிகட்டி அருந்தி வந்தால் உடல்சூடு தணியும்.சந்தனத்தூளைப் புகைத்து நறுமணம் வீசச் செய்தால் காற்றில் உள்ள நச்சுக் கிருமிகளைப் போக்கி சுவாசத்தைச் சீராக்கும், மனதிற்கு சாந்தத்தையும், மகிழ்ச்சியையும், புத்துணர்வையும் கொடுக்கும்.

Posted in: செய்திகள்