நடிகை மைனா நந்தினி இப்படிப்பட்டவரா..? கசிந்தது மற்றொரு ரகசியம்…!

மைனா இந்தப்பெயரை கேட்டதும் நம் நினைவுக்கு வருவது அண்மைகால சம்பவங்கள்தான்.

சின்னத்திரை நடிகை நந்தினியின் கணவர் கார்த்திகேயன் சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார். இவரின் தற்கொலைக்கு நந்தினி உட்பட பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதற்கிடையில், நந்தினி குறித்து கார்த்திக்கேயனின் அம்மா, பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

எனது மகனின் இறப்பிற்கு நந்தினி தான் காரணம் என்றும் எனது மகனை மிரட்டி நந்தினி திருமணம் செய்துகொண்டார் எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கார்த்திகேயனின் நண்பர் ஒருவர் சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இது எல்லோரும் அறிந்த விடயம்தான். ஆனால் பலருக்கு அறியாத விடயம் பற்றி தற்போது பல கருத்து வெளிவரத்தொடங்கியுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஒரு பெண்மணி மைனாவை பார்க்க வேண்டும் என்று விரும்பினாராம்.

இவரை சந்தித்த நந்தினி அவருடன் செல்பி எடுத்து ஆசையை நிறைவேற்றினாராம்.

ஆனால் அவருக்கு மாடர்ன் டிரஸ்சில் சந்தித்த போது இவரை அடையாளம் தெரியவில்லையாம்.

சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இவர் இதை கண்கலங்கி குறிப்பிட்டுள்ளார்.

இவர் மீது பல குற்றங்கள் சுமத்தப்பட்டு வரும் நிலையில் இந்த தகவலும் மெதுவாக கசிந்துள்ளது. இப்படி பட்டவரா இரண்டு பெயரின் தற்கொலைக்கு காரணமாக இருந்திருப்பார் என்ற கேள்வியும் எழும்பியுள்ளது.

Posted in: செய்திகள்