பத்திரிகை செய்தியால் மாணவி எடுத்த விபரீத முடிவு

கேரளவில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1180 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணூரை சேர்ந்த 17 வயதான Rafseena என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

பொதுத்தேர்வில் Rafseena 98.33 சதவீத மதிப்பெண்ணுடன் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற தகவல் அறிந்த பத்திரிகையாளர்கள், Rafseenaவின் குடும்ப சூழ்நிலை, அவரின் கடின உழைப்பு என Rafseenaவின் வாழ்க்கையை கட்டுரையாக வெளியிட்டுள்ளனர்.

மல்லூர் நீட்டரம்பம் காலனியில் ஒரே அறையில் Rafseena தனது தாயுடன் வாழ்ந்து வந்தது முதல் Rafseenaவின் தாய் தினக்கூலி வேலை செய்து அவரை படிக்க வைத்தது என அனைத்தும் கட்டுரையில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது.

Rafseenaவின் செய்தி பிரபலமாக கண்ணூர் எம்.பி தானாக முன்வந்து Rafseenaவின் படிப்பிற்கான செலவை தான் ஏற்பதாக அறிவித்தார்.

இந்நிலையில், பத்திரிக்கையில் வெளியான செய்தியின் மூலம் தனது ஏழ்மையான குடும்ப சூழ்நிலை குறித்து தனது பள்ளி நண்பர்களுக்கு தெரிந்துவிட்டது என கருதி மன உளைச்சலுக்கு ஆளான Rafseena தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

Rafseenaவின் இந்த முடிவு அவரது பள்ளி நண்பர்கள் மட்டுமின்றி கண்ணூர் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Posted in: செய்திகள்